டாஸ்மேனியா வடக்கிலுள்ள லான்செஸ்டனில் நடந்த கிறிஸ்துமஸ் கரோல் நிகழ்ச்சியில் கத்தியுடன் நுழைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இந்நிகழ்வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
டாஸ்மேனியாவை சேர்ந்த 48 வயது நபரே இவ்வாறு பொலிஸ் காவலின்கீழ் எடுக்கப்பட்டுள்ளார்.
கரோல் நிகழச்;சி நடந்துகொண்டிருக்கையில் சுமார் 30 செ.மீ. நீளமுள்ள கறுப்பு கைப்பிடி கத்தியை அவர் வெளியே எடுத்துள்ளார்.
இதனை அவதானித்த பொதுமக்கள், உடன் அவரிடம் இருந்து தூர விலகி சென்றனர். பின்னர் அவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டார்.
ஆயதம் வைத்திருந்த குற்றச்சாட்டு அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. அவர் இன்;று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுகின்றார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.