ஆஸ்திரேலியாவின் உளவுத்துறை மற்றும் பொலிஸ் உட்பட சட்ட அமுலாக்கத்துறை மீளாய்வுக்குட்படுத்தப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
இது தொடர்பான நடவடிக்கையை ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
போண்டி பயங்கரவாதத் தாக்குதலையடுத்தே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
ஆஸ்திரேலியா புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் டென்னிஸ் ரிச்சர்ட்சன் தலைமையிலேயே மதிப்பாய்வுக்காக, அரச ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது.
ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கை, அதற்காக செயல்படும் சட்ட அமுலாக்க துறைகளுக்கு உள்ள அதிகாரங்கள்,கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.