தென்கிழக்கு குயின்ஸ்லாந்திலுள்ள மசாஜ் நிலையங்களில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் என 61 வயது நபர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மசாஜ் நிலையத்தில் இருந்த 17 வயது பெண்ணை, அவர் தகாத முறையில் தொட்டார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மற்றுமொரு மசாஜ் நிலையத்தில் 29 வயது பெண்ணையும் தகாத முறையில் தொட்டுள்ளார்.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக இரு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
இவரால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.