போண்டி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மத்திய அரசாங்கம் ராயல் ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டியதில்லை என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
நியூ சவூத் வேல்ஸ் மாநில அரசால் ராயல் ஆணைக்குழு விசாரணை நடத்தப்படும். அதேபோல புலனாய்வு பிரிவு உட்பட சட்ட அமுலாக்கத்துறை மறுசீரமைக்கப்படும்.
இவ்விரு நடவடிக்கைகளும் போதுமானவை என கருதுகின்றேன் எனவும் பிரதமர் கூறினார்.
எனினும், ராயல் ஆணைக்குழு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தற்போதைய நிலையில் நாட்டின் ஐக்கியத்துக்காக எதிரணிகள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.