துப்பாக்கி மற்றும் போராட்ட சீர்திருத்த சட்டமூலம் நீண்ட விவாதத்துக்கு பின்னர் நியூ சவூத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் இன்று (24) நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிட்னி, போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்தே சட்டம் இவ்வாறு கடுமையாக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தொடர்புகள் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பில் துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்குவது குறித்த கிறீன்ஸ் கட்சியின் யோசனையும் உள்வாங்கப்பட்டது.
கடந்த இரு நாட்களாக இது தொடர்பில் விவாதம் இடம்பெற்றது. மேற்படி சீர்திருத்தங்களுக்கு நெசனல்ஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
பயங்கரவாத அமைப்பு அல்லது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படுவதை புதிய சட்ட ஏற்பாடு தடுக்கின்றது.