போண்டி பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக செயல்பட்ட நாயகர்களை கௌரவிப்பதற்காக புதிய விருது உருவாக்கப்படவுள்ளது.
பாலி குண்டுவெடிப்பு, எம்.எச்.17 விமான விபத்து என்பவற்றின்போது பயன்படுத்தப்பட்ட சிறப்பு கௌரவப்பட்டியலை நிறுவுமாறு ஆளுநர் நாயகத்திடம், பிரதமர் அந்தோனி அல்பானீஸி கோரிக்கை விடுத்துள்ளார்.
விருந்து பெறுநர்கள் தொடர்பான அறிவித்தல் 2026 ஆம் ஆண்டில் அறிவிக்கப்படும்.
பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து உதவி செய்ய விரைந்த காவல்துறை, சுகாதார பணியாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பட்டியலில் இணைக்கப்படவுள்ளனர்.
போண்டி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவ நிதி திரட்டி வரும் யூத சமூக அறக்கட்டளையையும் அரசாங்கம் ஒரு சமூக தொண்டு நிறுவனமாக அறிவித்துள்ளது.