போண்டியில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதியொருவரின் துப்பாக்கியை பிடுங்குவதற்காக போராடிய நிலையில், காயமடைந்த அகமது அல் அகமது குணமடைந்துவருகின்றார்.
அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று ஆஸ்திரேலியாவில் வாழும் சிரிய சமூக தெரிவித்துள்ளது.
இவர் ஐந்து துப்பாக்கிசூட்டுச் காயங்களுக்கு இலக்காகியுள்ளார். சிட்னி வைத்தியசாலையில் அவருக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சாஜித் அக்ரமும் அவரது மகன் நவீத்தும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 50 வயதான சாஜித் அக்ரம் கொல்லப்பட்டார். அவரது மகன் வைத்தியசாலையில் பொலிஸ் காவலின்கீழ் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
துப்பாக்கிதாரியிடம் இருந்து துப்பாக்கியை பறித்த அகமதுக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்தன. அமெரிக்க ஜனாதிபதிகூட அவரது செயலை பாராட்டி இருந்தார்.
ஆஸ்திரேலியாவில் அவருக்கு விரைவில் விருதும் வழங்கப்படவுள்ளது.