கர்ப்பிணி பெண்ணொருவர்மீது தாக்குதல் நடத்தி, அதிகாரிகள்மீது துப்பாக்கிக்சூடு நடத்தினார் எனக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்மஸ் தினத்தன்று விட்லாமில் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். பிணை மறுக்கப்பட்டு, பொலிஸ் காவலில் உள்ளார்.
கர்ப்பிணி பெண்மீது தாக்குதல், பொலிஸார்மீது துப்பாக்கிச்சூடு நட்பட பல குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
இவர் நடத்திய துப்பாக்கிக்சூட்டில் சில வீடுகளும் சேதமடைந்துள்ளன.