பூர்வக்குடி சமூகத்தில் நபரொருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நோட்டன் டெரடரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ஆலிஸ் ஸ்பிரிங்ஸிலிருந்து வடமேற்கே 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பகுதியிலேயே இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
35 வயது நபருக்கு மார்பு பகுதியிலேயே கத்தியால் குத்தக்கப்பட்டுள்ளது. அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், சிகிச்சi பலனின்றி உயிரிழந்தார்.
லாரம்பா மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தொலைதூர சமூகம், சுமார் 220 பேர் அங்கு வசிக்கின்றனர்.
இந்நிலையில் கொலையாளி தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.