ஈ.பி.டிபியின் செயலாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநன்தா இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலை தொடர்பான விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணையொன்று தொடர்பிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு “பிஸ்டல்” ரக துப்பாக்கியொன்று சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
பாதாள குழு உறுப்பினர் வெளியிட்ட தகவலுக்கமைய 2019 ஆம் ஆண்டு வெலிவேரிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே டக்ளஸ் தேவானந்த கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கம்பஹா நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு சிஐடியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.