சிட்னி, போண்டி கடற்கரையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் வாழும் யூத சமூகத்திடம் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் மன்னிப்பு கோரியுள்ளார்.
யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கண்டிக்கவில்லை என எதிரணிகள் விசனம் வெளியிட்டு வந்தன.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கில் அவர் பங்கேற்காமை தொடர்பிலும் விமர்சனம் எழுந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே யூத சமூகத்திடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
“ இறுதிச் சடங்குகள் மிகவும் தனிப்பட்டவை, பொதுவாக குடும்பத்தினரால் நடத்தப்படும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவில்லை.” எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, சிட்னியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் பலியானார்கள். 42 பேர் காயமடைந்தனர்.