சிட்னி, போண்டி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு பெடரல் விசாரணை ஆணைக்குழு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களால் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசால் நியமிக்கப்படவுள்ள ராயல் ஆணைக்குழு விசாரணை போதும், பெடரல் குழு தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே பிரதமர் உள்ளார்.
இந்நிலையிலேயே பிரதமருக்கு இவ்வாறு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
போண்டி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் எழுந்துள்ள அனைத்து கேள்விகளுக்கும் மாநில ராயல் ஆணைக்குழு பதில்களை தேடும் என்ற நம்பிக்கை உள்ளது என நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரீமியர் தெரிவித்தார்.
தாக்குதல் மற்றும் அதைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஒரு சுயாதீன மறுஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, மாநில ராயல் ஆணைக்குழு விரைவில் நிறுவப்படும் என்று பிரீமியர் இன்று அறிவித்தார்.