சிட்னி மேற்கிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் கத்தியுடன் நுழைந்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் குறித்த இளைஞன் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இளைஞனை சுற்றிவளைத்து, பிடித்து கத்தியை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.