மெல்பேர்னில் பல்பொருள் அங்காடிகள் உட்பட முக்கிய இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட விசேட தேடுதல் வேட்டையின்போது நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
விக்டோரிய பொலிஸாரால் கடந்த 8 ஆம் திகத முதல் ஒப்பரேசன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கிறிஸ்மஸ் மற்றும் பாக்ஸிங் டே காலப்பகுதியில் பெருமளவானோர் பல்பொருள் அங்காடிகளுக்கு செல்வது வழமை. எனவே, பல்பொருள் அங்காடிகளில் விசேட தேடுதல் நடவடிக்கை, ரோந்து என்பன இடம்பெற்றன.
இந்த தேடுதல் வேட்டையின்போது 109 பேர் கைது செய்யப்பட்டனர். 30 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்று விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாதுகாப்பு நடைமுறை தொடரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.