17 வயது சிறுவனொருவர் ஓட்டிச்சென்ற காரில் இருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
மேற்கு சிட்னி வழியாக நேற்றிரவு காரொன்று பயணித்துள்ளது.
ரோந்து சென்ற பொலிஸாரை கண்டதும் காரை வேகமாக ஓட்டி, தப்பிச்செல்ல குறித்த சிறுவன் முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் காரை துரத்தி சென்றனர். கோல்ப் மைதானமொன்றில் சிறுவன் பதுங்கிய நிலையில் அவரை கைது செய்தனர்.
காரை சோதனைக்குட்படுத்தியபோது துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. 17 வயது சிறுவன் பரமட்டா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.