போண்டி கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட , பெடரல் அரச ஆணையம் (பெடரல் ரோயல் கமிசன்) தொடர்பான கோரிக்கையை பிரதமர் அந்தோனி அல்பானீஸி நிராகரித்துள்ளார்.
“அரச ஆணைய விசாரணை பொருத்தமானது அல்ல. எனவே, விசாரணைக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உளவுத்துறை மற்றும் சட்ட அமுலாக்க நிறுவனங்களை மீளாய்வுக்குட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.” – எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நியூ சவூத் வேல்ஸ் மாநில அரசு நியமிக்கவுள்ள ராயல் ஆணைக்குழுவுக்கு பிரதர் அல்பானீஸி ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளார்.
எனினும், பெடரல் விசாரணை (பெடரல் ரோயல் கமிசன்) ஆணைக்குழு வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, சிட்னி, போண்டி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு பெடரல் விசாரணை ஆணைக்குழு அவசியம் என மேற்படி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களால் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.