தாய்வானை சுற்றியுள்ள பகுதியில் சீனா பெருமெடுப்பில் முன்னெடுத்துவரும் போர் பயிற்சி தொடர்பில் ஆஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது.
இப்பயிற்சியானது பிராந்திய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மோதல் தீவிரமடைய வழிவகுக்கக்கூடும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிராந்திய பதற்றம் தீவிரமடைவதை ஆஸ்திரேலியா விரும்பவில்லை எனவும், பேச்சுமூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாய்வான் ஜலசந்தி முழுவதும் தற்போதைய நிலையை மாற்றுவதற்கான எந்தவொரு ஒரு தலைப்பட்ச நடவடிக்கையையும் தமது நாடு எதிர்க்கும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
தாய்வானை தனது பிராந்தியமாகவே சீனா கருதுகின்றது. இது தொடர்பிலேயே இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினை மூண்டுவருகின்றது.