ஆஸ்திரேலியாவின் வழியை பின்பற்றி 2026 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் சிறார்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதற்கு பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதை தடுக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருகின்றது. இது தொடர்பில் இம்மாதம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என தெரியவருகின்றது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுத்த உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியது.
இந்நிலையல் ஆஸ்திரேலியா விதித்த உலகிலேயே முதல் தடையை பிரான்ஸ் விரைவாகப் பின்பற்ற வேண்டும் என்று தான் விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.