சிட்னியில் வார இறுதியில் நடைபெற்ற பாலஸ்தீனம் மற்றும் லெபனான் ஆதரவு போராட்டத்தின்போது ஹிஸ்புல்லா அமைப்பின் கொடியை காட்சிப்படுத்தினார் எனக் கூறப்படும் 19 வயது யுவதியொருவர் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் குறித்த யுவதி இன்று தாமாக சரணடைந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பு ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.
இவ்வாறு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் கொடி மற்றும் அடையாளங்களை காட்சிப்படுத்துவதை தடுக்கும் சட்டம் அண்மையில் ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய கைது செய்யப்பட்டுள்ள யுவதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதேவேளை, இவ்வார இறுதியிலும் சிட்னி மற்றும் மெல்பேர்ணில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.