புதிய வரி குறித்து சீனாவுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவை மட்டும் இலக்கு வைத்து வரி விதக்கப்படவில்லை எனவும், அது சீனாவின் பொது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, வரி விதிப்புக்கு முன்னரே அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்குரிய வரப்பை சீனா அறிவித்துள்ளது. இந்த வரம்பைமீறினால் 55 சதவீத வரி விதிக்கப்படும்.
புதிய ஏற்பாடுகளின் பிரகாரம் ஆஸ்திரேலியா 2 லட்சத்து 5 ஆயிரம் தொன்கள் மாட்டிறைச்சியை சாதாரண நடைமுறைகளின்கீழ் ஏற்றுமதி செய்ய முடியும். அந்த வரம்பை தாண்டியால் 55 சத வரி விதிக்கப்படும்.
மூன்றாண்டுகளுக்கு இந்த நடைமுறை அமுலில் இருக்கும். அதன்பின்னர் மீளாய்வு செய்யப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த முடிவால் ஆஸ்திரேலியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி மூன்றில் ஒரு பங்களால் குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.