மெல்பேர்னில் பொலிஸ் நிலையமொன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இதன்பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது.
பிட்ஸ்ராய் காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரி, நள்ளிரவுக்குப் பிறகு கிங் வில்லியம் தெருவில் உள்ள நிலையம் அருகே இரண்டு துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகத் தெரிவித்தார்.
விசாரணைக்காக வெளியே சென்ற பின்னர், தலையில் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இளைஞர் ஒருவர் காணப்பட்டுள்ளார். முதலுதவி அளிக்கப்பட்டாலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் இன்னும் முறையாக அடையாளம் காணப்படாத அந்த ஆண் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வாகனத்தில் இருந்தவாறே துப்பாக்கிச்சுடு நடத்தப்பட்டுள்ளது. இது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.