சிட்னி தென்மேற்கிலுள்ள மாற்றுத்திறனாளிகள் ஆதரவு இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று (03) அதிகாலை 12:25 மணிக்குப் பிறகு ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை இடம்பெற்றுவருகின்றது. மேற்படி இல்லத்தில் மூவர் வசித்து வந்தனர்.
தீ விபத்தையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருவர் வெளியேறினர். மேலும் ஒருவர் வீட்டுக்குள் சிக்கி இருந்தார்.
அங்கு இரு மாற்றுத்திறனாளிகள் பராமரிக்கப்பட்டுந்துள்ளனர். 60 வயது நபரொருவரே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
தீ விபத்து சந்தேகத்துக்கிடமானதாக கருதப்படவில்லை. விசாரணை நடைபெற்றுவருகின்றது.