வெனிசுலாமீதான அமெரிக்காவின் அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் கண்காணித்து வருகிறது என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், மோதலைத் தடுப்பதற்கும் அனைத்து தரப்பினரும் உரையாடல் மற்றும் ராஜதந்திர வழிமுறையை பின்பற்றுமாறு கோருகின்றோம்.
ஜனநாயகக் கொள்கைகள், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதிக்க வேண்டிய அவசியம் உட்பட வெனிசுலாவின் நிலைமை குறித்து ஆஸ்திரேலியா நீண்ட காலமாக கவலைகளை எழுப்பி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெனிசுலா மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் சர்வதேச சட்டம் மற்றும் வெனிசுலாவில் அமைதியான, ஜனநாயக மாற்றத்தை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறோம் என பிரதமர் அல்பானீஸி மேலும் குறிப்பிட்டார்.