போண்டி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் "பெடரல் ரோயல் கமிஷன்" அமைக்குமாறு லேபர் அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்துவருகின்றன.
இந்நிலையில் 60 இற்கு மேற்பட்ட ஆஸ்திரேலிய விளையாட்டு நட்சத்திரங்கள் இணைந்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதில் பயங்கரவாதத் தாக்குதல் பற்றி ஆராய பெடரல் ரோயல் கமிஷன் கோரப்பட்டுள்ளது.
போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் மேற்படி கோரிக்கையை விடுத்திருந்தனர்.
எனினும், பெடரல் ரோயல் கமி~ன் கோரிக்கையை பிரதமர் நிராகரித்தார். அதற்கு பதிலாக புலனாய்வு பிரிவு மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் செய்யப்படும் என உறுதியளித்தார். அதேபோல நியூ சவூத் வேல்ஸ் மாநில அரசால் அமைக்கப்படும் ராயல் கமிஷன் விசாரணையை அவர் ஆதரித்தார்.
இதனையடுத்து பெடரல் ராயல் கமி~ன் கோரி வர்த்தக தலைவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
இந்நிலையிலேயே முன்னணி விளையாட்டு நட்சத்திரங்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.