போண்டி பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய நவீத் அக்ரம், சிட்னி சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
24 வயதான அவர்மீது 15 கொலைக்குற்றச்சாட்டுகள் உட்பட 59 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
யூத சமூகத்தை இலக்கு வைத்து கடந்த டிசம்ப் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 40 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தந்தை மற்றும் மகன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். தாக்குதல் தினத்தன்றே தந்தை கொல்லப்பட்டார். நவீத் அக்ரம், பொலிஸ் துப்பாக்கிச்சுட்டில் காயமடைந்தார்.
பொலிஸ் பாதுகாப்பின்கீழ் 9 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தார், அதன்பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையிலேயே அவர் தற்போது அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.