போண்டி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு “ பெடரல் ராயல் கமிசன்” வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் Sussan Ley
மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், வெனிசுலாமீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையையும் அவர் நியாயப்படுத்தியுள்ளார்.
“வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை காவலில் எடுப்பதை கூட்டணி ஆதரிக்கிறது," என்று Sussan Ley இன்று காலை அறிவித்தார்.
சர்வாதிகாரிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
போண்டி பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி விதிமுறைகளை நிவர்த்தி செய்ய பெடரல் அரசாங்கம் புதிய சட்டங்களை உருவாக்கி வருகிறது,
நாடாளுமன்றம் கூடும்போது இது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
எனினும், கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிரணி வலியுறுத்தி இருந்தது. எனினும், அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.