மெல்பேர்னில் கிறிஸ்மஸ் பண்டிகையன்று காரொன்றுமீது பொற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
யூத வசனம் எழுதப்பட்டிருந்த காரொன்றே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி இருந்தது.
தாக்குதலின்போது காருக்குள் எவரும் இருக்கவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் 47 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டுவருகின்றார்.