கன்பரா வடக்கு பகுதியில் ஆணொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான குறித்த பெண்ணின் அடுக்குமாடி குடியிருப்பில் அவரும், அவருக்கு தெரிந்த ஆணும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து ஆண்மீது சரமாரியாக தாக்குதல் நட்தியுள்ளார்.
காயமடைந்த ஆண் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.