2026 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் சனத்தொகை 28 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோல வெளிநாட்டு குடியேறிகளின் எண்ணிக்கை மற்றும் பிறப்பு வீதம் என்பன குறைவடைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சனத்தொகை வளர்ச்சி வேகம் 1.3 சதவீமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த விகிதம் 1.5 ஆக இருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியர்கள் குழந்தைகள் பெறுவதை ஊக்குவிக்கும் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய பொருளாளர் தெரிவித்தார்.
குடும்பங்கள்மீதான அழுத்தங்களை (வாழ்க்கைச் செலவை) குறைப்பது, கட்டுப்படுத்துவதும் இதன் ஓர் அங்கம்.