சிட்னி மேற்கு பகுதியில் நபரொருவர் இன்று அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மெர்ரிலேண்ட்ஸிலுள்ள நியூமன் வீதி பகுதியிலேயே இன்று காலை 6.44 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து முதலுதவி அளித்தாலும் சம்பவ இடத்திலேயே 44 வயதான குறித்த நபர் உயிரிழந்தார்.
இது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அது தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
உயிரிழந்தவர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு உள்ளதென தெரியவருகின்றது. எனினும், பாதாள குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மேற்படி முறைப்பாடு இல்லை என அறியமுடிகின்றது.