ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மீண்டும் கூடும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
நாடாளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி கூடும் என்றே முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி ஆஸ்திரேலியாவில், சிட்னி போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனையடுத்து வெறுப்பு பேச்சு மற்றும் துப்பாக்கி சீர்திருத்தம் என்பன பற்றி சட்டங்களை இயற்றுவதற்காக நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு எதிரணிகள் வலியுறுத்தின.
இந்நிலையிலேயே மேற்படி திகதிகளில் நாடாளுமன்றம் மற்றும் செனட் சபை ஆகிய இரு அவைகளும் கூடும் என ஆஸ்திரேலிய பிரதமர் இன்று அறிவித்தார்.
போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது.