இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றது.
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் 8 வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 67 ஆயிரத்து 762 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஜனவரி முதலாம் திகதி 8 ஆயிரத்து 377 பேரும், 8 ஆம் திகதி 8 ஆயிரத்து 939 பேரும் வருகை தந்துள்ளனர். ஜனவரி 6 ஆம் திகதி 9 ஆயிரத்து 275 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்தே இக்காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து 11 ஆயிரத்து 367 பேர் வந்துள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து 8 ஆயிரத்து 425 பேரும், இங்கிலாந்தில் இருந்து 6 ஆயிரத்து 67 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து 6 ஆயிரத்து 67 பேரும், ஜேர்மனில் இருந்து 5 ஆயிரத்து 306 பேரும், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 ஆயிரத்த 285 பேரும் வருகை தந்துள்ளனர்.
கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் .
அந்த எண்ணிக்கையை இவ்வருடம் 30 லட்சம்வரை அதிகரித்துக்கொள்வதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது.