வடக்கு டாஸ்மேனியாவிலுள்ள வீடொன்றில் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றுள் பல துப்பாக்கிகள் உரிமம் பெறாதது எனவும், 2015 இல் களவாடப்பட்டவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
டாஸ்மேனியா பொலிஸார் வெள்ளிக்கிழமை குறித்த நபரின் வீட்டை சோதனை செய்தனர்.
இதன்போது 40 துப்பாக்கிகள் மற்றும் 250 கிலோகிராம் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றுள் 31 துப்பாக்கிகள் பதிவு செய்யப்பட்டனவை எனவும், 8 துப்பாக்கிகள் பதிவுசெய்யப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது. அத்துடன், களவாடப்பட்ட துப்பாக்கி ஒன்றும் இருந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, வழக்கு தொடுக்கப்படவுள்ளது.