தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் காயமடைந்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று காலை பயணிகள் ரயில் பயணமானது.
குறித்த ரயில பாங்காக்கில் இருந்து 230 கி.மீ. தொலைவில் நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது.
ரயில் செல்லும் பாதையில் அதிவிரைவு ரயில் திட்டம் சார்ந்த பணிகள் நடந்து வந்துள்ளன.
இதற்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் ஒன்று திடீரென சரிந்து ரயில் ஒரு பெட்டியின் மீது விழுந்துள்ளது. இதில் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் 22 பேர் உயிரிழந்தனர். 80 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. ரயிலில் 195 பேர்வரை பயணித்துள்ளனர். விசாரணை நடக்கின்றது.