மத்திய கிழக்குக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு ஆஸ்திரேலியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்டார் மற்றும் ஓமான் நாட்டுக்குரிய பயண எச்சரிக்கையின் ‘அபாய’ நிலைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் போராட்டங்கள் தொடரும் நிலையில் அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது.
ஈரானில் மோதல்நிலை உக்கிரமடையும் என்பதாலேயே வான்வெளி மூடப்பட்டுள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது.
மத்திய கிழக்கிலுள்ள தமது படைகளை அமெரிக்கா வெளியேற்றி வருகின்றது. இராணுவ நடவடிக்கைக்குரிய தந்திரோபாய நகர்வாக இது பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ஈரானுக்கு ஆஸ்திரேலியா பயணத் தடை விதித்துள்ளது. அந்நாட்டிலுள்ள தமது பிரஜைகளை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.