விக்டோரியா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் திடீர் வெள்ள பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன.
இதனால் கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் சங்கமித்துள்ளன.
குறித்த பிரதேசத்தில் சில மணித்தியாலங்களுக்குள் சுமார் 169 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள் வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தத் திடீர் மழையினாலேயே குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்தநிலையில், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள அவசர நிலையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் பொலிஸாரும், அவசர சேவைப் பிரிவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.