போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானுக்கு கூடுதலாக நிதி உதவி வழங்கப்படாவிட்டால் அங்கு உணவு பஞ்சம் தலைதூக்கும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
சூடானில் 1000 நாட்களுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நீடிக்கின்றது.
இந்நிலையில் சூடானில் பஞசம் போக்குவதற்காக ஐ.நாவின் உலக உணவு திட்டம் அமைப்பு , 700 மில்லியன் டொலர்களை கோரியுள்ளது.
பஞ்சம் மற்றும் இடம்பெயர்வைத் தடுக்கவே அவசர நிதியாக இது தேவைப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இராணுவ ஆட்சிக்கும், துணை இராணுவக்குழுக்களுக்கிடையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் போரால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
14 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சூடானில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உணவு இருப்பு தீர்ந்துவிடும் என உலக உணவு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, 700 மில்லியன் டொலர்கள் அவசர நிதி கிடைக்கும்பட்சத்தில் ஜுன் மாதம்வரை நிலைமையை சமாளிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
சூடான் சனத்தொகையில் 50 சதவீதமானோர் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.