துப்பாக்கி கட்டுப்பாட்டு மற்றும் வெறுப்பு பேச்சு என்பன தொடர்பில் தனித்தனி சட்டமூலங்களை முன்வைப்பதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிரணி கூட்டணி மற்றும் பசுமைக் கட்சி என்பன போர்க்கொடி தூக்கி இருந்த நிலையிலேயே இதற்குரிய நடவடிக்கையை லேபர் அரசு முன்னெடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து , பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
அதேபோல இனவாதத்தை தூண்டும் வகையிலான பேச்சுகளை தடுப்பதற்காக வெறுப்பு பேச்சை சட்டவிரோதமாக்கும் சட்டமூலம் முன்மொழியப்பட்டது.
அத்துடன், துப்பாக்கி தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவதற்கும் ஏற்பாடு இடம்பெற்றது.
எனினும், வெறுப்பு பேச்சு சட்டமூலம் கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக அமையும், போராட்டங்களுக்கு தடையேற்படுத்தும் என எதிரணிகள் சுட்டிக்காட்டின.
அதற்கு ஆதரவு வழங்க முடியாது எனவும் அறிவித்தன. எனினும், துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்துக்கு பசுமைக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே முதலில் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தை முன்வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.