யுவதியொருவரை கொலை செய்தார் எனக் கூறப்படும் வடக்கு குயின்ஸ்லாந்தை சேர்ந்த நபர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளது.
குடும்ப வன்முறையால் இக்கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
கோர்டன் வேல் பகுதியில் ஆயதம் ஏந்திய நபரொருவர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் காணப்படுகின்றார் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, சந்தேக நபரை கைது செய்தனர்.
வீட்டுக்குள் நடத்திய சோதனையின்போது 29 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கேயர்ன்ஸ் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்படுகின்றார்.