ஆஸ்திரேலியாவில் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் மற்றும் நெஷனல்
கட்சிகளுக்கிடையேயான கூட்டணி, தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக பிளவுபட்டுள்ளது.
வெறுப்பு பேச்சு சட்டங்கள் தொடர்பான கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, நெஷனல் கட்சியின் 8 முன்னணி உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, நெஷனல் கட்சி தலைவர் டேவிட் லிட்டில்ப்ரௌட், எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே தலைமையிலான நிழல் அமைச்சரவையில் தமது கட்சி இனி பங்கேற்காது என அறிவித்தார்.
“ கூட்டணி இனி நிலைத்திருக்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டது,” என அவர் தெரிவித்தார்.
வெறுப்பு பேச்சு – செயலுக்கு எதிரான சட்டங்களை கடுமைப்படுத்தும் சட்டமூலத்துக்கு எதிராக, நெஷனல் கட்சியின் மூன்று முன்னணி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இது நிழல் அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராக அவர்கள் வாக்களித்தாலேயே குழப்பம் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் நெஷனல் செனட்டர்களின் ராஜினாமாவை சுசன் லேய் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, முழு கட்சியும் நிழல் அமைச்சரவையை விட்டு விலகுவதாக லிட்டில்ப்ரௌட் அறிவித்தார்.
அமைச்சரவை ஒற்றுமை கட்டாயமானது என்றும், நெஷனல் கட்சியின் நடவடிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாக இருந்தது என்றும் சூசன் லே விளக்கம் அளித்தார்.
பல தசாப்தங்களாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அரசியலை வடிவமைத்து வந்த இந்த கூட்டணி, தற்போது பெரும் அரசியல் நெருக்கடியை சந்தித்து வருகிறது.