ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லேக் கார்ஜெலிகோ Lake Cargelligo நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ள நிலையில் தேடுதல் வேட்டை இடம்பெறுகின்றது.
ஆஸ்திரேலிய நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 4.20 மணியளவில், வாகனமொன்றின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இது தொடர்பில் அறிந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்தனர். இரு பெண்களும், ஆணொருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் Lake Cargelligoபகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இச்சம்பவத்தையடுத்து நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
நகரம் என்பது சிட்னியில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அங்கு ஆயிரத்து 169 பேர் வாழ்கின்றனர்.
துப்பாக்கிதாரி இன்னும் அடையாளம் காணப்படவில்லை. விசாரணை வேட்டை தொடர்கின்றது.