சிட்னி கிழக்கு கடற்பகுதியில் சுறா தாக்குதலுக்கு இலக்கான 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் ஒருவாரகாலமாக சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
நிக்கோ ஆன்டிக் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலைவேளையிலேயே இவர் சுறா தாக்குதலுக்கு இலக்கானார்.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.