சிட்னி மூர் பார்க்கில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தின அணிவகுப்பு ஆர்ப்பாட்டத்தின்போது நவ நாஜி கருத்துகளை முன்வைத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 குறித்த நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.
“ நவ-நாஜி சித்தாந்தத்துடன் இணைந்த வெறுப்புப் பேச்சில் அவர் ஈடுபட்டார்.” – எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் நடக்கும் பேரணிகளின்போது கூட்டாட்சி சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்.” என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரீமியர் தெரிவித்தார்.