பிரதமர் அந்தோணி அல்பானீஸி விடுத்த அழைப்பையேற்று இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
அவர் பெப்ரவரி 8 ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு வருவார் எனவும், போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி போண்டி கடற்கரையில் நடந்த ஹனுக்கா நிகழ்வில் 15 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஹெர்சாக் அல்பானீஸால் அழைக்கப்பட்டார்.
“ தாக்குதலுக்குப் பிறகு ஒற்றுமையை வெளிப்படுத்தவும் சமூகத்திற்கு பலத்தை வழங்கவும் ஜனாதிபதி ஹெர்சாக் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள யூத சமூகங்களுக்குச் செல்வார்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 12 ஆம் திகதிவரை அவர் ஆஸ்திரேலியாவில் தங்கி இருப்பார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவாரா அல்லது அவர் சந்திக்கும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் தொடர்பான உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.