பெர்த்தில் நடைபெற்ற இன்வேஷன் டே Invasion Day பேரணியின் போது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தை, மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறை பயங்கரவாதத் தாக்குதலாக கருதி விசாரித்து வருகிறது.
இச்சம்பவத்தில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், திருகுகள் மற்றும் உலோக உருண்டைகள் கொண்ட அந்த வெடிபொருள் பெரிய அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த விசாரணை பூர்வக்குடி தலைவர்கள் வரவேற்றுள்ள அதே வேளையில், மத்திய அரசு இத்தகைய இனவாத வன்முறைகளுக்கு எதிராக இன்னும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
ஆஸ்திரேலியப் பிரதமர் இத்தாக்குதலைக் கண்டித்திருந்தாலும், நாட்டின் சமூக ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் ஆஸ்திரேலிய சமூகத்தில் நிலவும் பிரிவினையையும் இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் அவசியத்தையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.