அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உடனடியாக நிதிச்சரிவை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
" அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் நிறைவேற்ற வேண்டும். அல்லது உடனடி நிதிச் சரிவைத் தடுக்க, உறுப்பு நாடுகள் நமது நிதி விதிகளை மாற்றி அமைக்க வேண்டும்" என மேற்படி கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், கடிதத்தில் எந்தவொரு நாட்டையும் குறிப்பிடவில்லை.
ஐ.நா.வுக்கு அதிக நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா உள்ளது.
அமெரிக்கா தற்போது ஐ.நா.வின் வழக்கமான வரவு செலவுத் திட்டத்திற்கு 2.16 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும். மேலும் இந்த ஆண்டுக்கு 767 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க வேண்டியுள்ளது.
வெனிசுலா 38 மில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது வெனிசுலா பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளது.அமெரிக்கா 2025 இறுதியில் 1.568 பில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளது. இது 2024-ம் ஆண்டைவிட இரண்டு மடங்கு என அன்டோனியா குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.