இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான டெஸி ப்ரீமேனை Dezi Freeman கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டையை விக்டோரியா காவல்துறையினர் மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.
நூற்றுக்கு மேற்பட்ட பொலிஸார், தன்னார்வலர்கள் ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
Porepunkah அருகே உள்ள Mount Buffalo தேசிய பூங்காவில், ப்ரீமேன் கடைசியாக காணப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதிக்கு அருகில் தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த டிசம்பரிலும் இதே பூங்காவில் தேடுதல் வேட்டை இடம்பெற்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று போரெபுங்காவில் உள்ள அவரது வீட்டில் நடந்த சம்பவத்தில், பொலிஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தேடுதல் நடவடிக்கைக்கு சென்ற அதிகாரிகளே இவ்வாறு கொல்லப்பட்டனர்.
சம்பவத்தின் பின்னர் அவர் தலைமறைவானார். பல மாதங்கள் கடந்தும் அவர் பற்றி தகவல் இல்லை.
இந்நிலையிலேயே மீண்டும் தேடுதல் வேட்டை ஆரம்பாகியுள்ளது.