இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொலை செய்துவிட்டு தலைமறைவான டெஸி ப்ரீமேன் உயிரிழந்திருக்கலாம் என விக்டோரியா காவல்துறையினர் உறுதியாக நம்புகின்றனர்.
56 வயதான குறித்த நபரை தேடும் நடவடிக்கை இன்று மீண்டும் ஆரம்பமாகிய பின்னரே, அவர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குகைகள், சுரங்கங்கள், ஆறுகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் தேடுதல் நடத்தப்பட்டது. எனினும், அவர் உயிருடன் இருப்பதற்குரிய சாத்தியம் இல்லை என மூத்த காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எனினும், போதுமானளவு ஆதரம் சிக்கும்வரை தேடுதல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://ethiroli.com/australia/2175