இஸ்ரேல் ஜனாதிபதிக்கு ஒன்லைன்மூலம் கொலை மிரட்டல் விடுத்த 19 வயது இளைஞன்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று கைது செய்யப்பட்ட இளைஞன், இன்று சிட்னி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
நியூடவுனைச் சேர்ந்த டார்சி டின்னிங் என்பவரே ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது தொலைபேசி மற்றும் சில உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவருக்கு நேற்று பொலிஸ் பிணை மறுக்கப்பட்டது. தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
சிட்னி, போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து டிசம்பர் 14 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
எனவே, யூத சமூகத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இஸ்ரேல் ஜனாதிபதிக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்று எதிர்வரும் 8 ஆம் திகதி அவர் சிட்னி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.