பேர்த் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற Invasion Day பேரணிமீது குண்டுத் தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவம், பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி என தெரியவந்துள்ளது.
இதனுடன் தொடர்புடைய 31 வயது இளைஞன்மீது பயங்கரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு தயாரித்தல்/வைத்திருத்தல் மற்றும் சேதம் விளைவிக்கும் நோக்கம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கூட்டுத் தீவிரவாத எதிர்ப்பு குழு (Joint Counter Terrorism Team) தற்போது “பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டல்” என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டையும் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா தினத்தன்று பெர்த் மத்திய நகரில் (CBD) சுமார் 2,500 பேர் கலந்து கொண்ட பேரணிக்குள் வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு வீசப்பட்டுள்ளது. குண்டு வெடிக்காததால், பேரணி பாதுகாப்பாக கலைக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.